Monday, November 29, 2010

எப்படியிருக்கேன்...!!!

எப்படியிருக்கேன்!
என்றாய் ஒரு நாள் உன்
புகைப்படம் ஒன்றைக் காட்டி..

வழக்கம் போல
வேடிக்கையாய் பேசி
விடைபெற்றுக் கொண்டேன்

இன்னும் பார்த்துக் கொண்டே
இருக்கிறேன் எப்படி
இருக்கிறாய் என்று?

அன்று கேட்ட நீ
அடுத்த
வேலைப் பார்க்க
சென்று விட

எப்போது வருவாய்
என்று உன்னை
கேட்பதே என்
வேலையாகிவிட்டது

அகர முதல
எழுத்தெல்லாம்
அவள் பெயரே என
நான்

வடம் இழந்த தேராய்
வலுவிழந்த புயலாய்
செயல் மறந்த மதியாய்
உனை சேராதிருப்பது
என் விதியா என

எப்படியிருக்கேன்! என
நீ காட்டிய புகைப்படத்தை
பார்த்து புலம்பியவாறே.....

Thursday, November 4, 2010

அன்புள்ள உயிர்க்கு.....

எத்தனை நாள் பேசுவேன்
பறவைகளிடமும் பூக்களிடமும்
எவ்வளவு என் தோழனிடம் பகிர்வேன்
என்னை தொல்லை என நினைத்து
என்னை பார்த்து சிரிக்கிறான் மீரான்
எதிர் கவிதை எழுதுகிறான் இனியன்
என் எஸ்எம்எஸ்ஐ தவிற்கிறான் கார்த்தி....

நீ கணவில் முணுமுணுத்ததை
கவிதையாய் எழுதி வந்தேன்
அதை படித்த பாலாடை போர்த்திய
வெள்ளிநிலா என்னிடம் நூலாடை கேட்கிறது
வெட்கத்தை மறைத்து கொள்ள....

என்னை விட நீளமாய் என் நிழல்
என்னோடு நடை போட
மிதிக்க மனமில்லை
என்னுள் நீ கலந்து இருப்பதால்....

நான் மட்டும் இங்கு வெறும் கனவோடு
உன்னை நான் நினைத்தது போதும்
நேரில் வா....

அடுத்த கவிதை எழுதும் முன்
முத்தமிட்டு என் விரல்களை மீட்டுவிடு...!